Sunday, February 15, 2015

1958இல் மலேசியத் தமிழர் பயன்படுத்திய கடப்பிதழ்

28.04.1958இல் வினியோகிக்கப்பட்ட கடப்பிதழ். இக்கடப்பிதழில் மூன்று முத்திரைகள் உள்ளன.

முதல் முத்திரை 10 ஜூலை 1958- இல் சென்னை துறைமுகச் சுங்கத்தால் (Port Registration Officer, Madras Harbour) இடப்பட்டுள்ளது. அம்முத்திரையில் இந்தியாவை அடைந்ததாகவும் (arrived in India) குறிப்பிடப்பட்டுள்ளது.

13 மார்ச்சு .1959-இல் இடப்பட்ட இரண்டாம் முத்திரையில் இந்தியாவைவிட்டு வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளது (Left India).

மூன்றாம் முத்திரை 19 மார்ச்சு .1959-இல் பினாங்கு சுங்கத்துறையால் இடப்பட்டுள்ளது.

இதன் வழி சென்னையிலிருந்து கப்பலில் பினாங்கு வந்து சேர்வதற்கு ஆறு நாள்கள் தேவைப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.

1 comment:

  1. கப்பல் கம்பெனியின் பெயர் எஸ் .எஸ்.ரஜுலா. S.S.என்பதன் விரிவாக்கம்Steam Ship.
    பின்னர் அது m.v.சிதம்பரம் ஆகியது. m.v. என்பதன் விரிவாக்கம் motor vessel. எழுபதுகளில் இது தீக்கிரையாகி யது....அதன்பின்னர் கப்பல் போக்குவரத்து இல்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete