Saturday, September 26, 2015

கைரேகை சோதிடம் - மலேசியா கிள்ளான் *2002



இங்கு படத்தில் காண்பது மலேசிய நாட்டில் கிள்ளான் நகரில் தமிழர்கள் பெருவாரியாக வணிகம் செய்யும் மையச் சாலைப் பகுதியில் ஒரு ஓரத்தில் கைரேகை  சோதிடம் பார்க்கும் ஒரு சோதிடக்காரர். சோதிட வகைகளில் மலேசியாவில் கைரேகை சோதிடமும் சோளி குலுக்கிப் போட்டு குறி சொல்வதும் வழக்கத்தில் இருக்கின்றன. அது போல  சாமி ஆடி குறிபார்த்து சோதிடம் சொல்வதும் இன்றும் வழக்க்த்தில் இருக்கும் ஒன்றே.
-சுபா

Wednesday, August 5, 2015

20ம் நூற்றாண்டு தமிழ் விளம்பரம்

மலாயாவின் சுதந்திரத்திற்கு முந்தைய விளம்பரங்கள் அக்கால நிலையை விளக்கும் நல்ல ஆவணங்கள். இன்றும் மலேசிய மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நெஸ்டம் என்ற கேழ்வரகு,பார்லி கலந்த நெஸ்டம் என்ற காலை உணவு விளம்பரத்தை இங்கே காணலாம். இதில் சிறப்பு என்னவென்றால் முன்னர் மலாயாவில் வழக்கில் இருந்த காவி எழுத்தும் தமிழ் எழுத்தும் சேர்ந்து இந்த விளம்பரத்தில் இருப்பதைக் காணலாம்.
அனுப்பி உதவிய நண்பர் கோவிந்த பாலாவுக்கு நம் நன்றி.




சுபா

Sunday, February 15, 2015

1958இல் மலேசியத் தமிழர் பயன்படுத்திய கடப்பிதழ்

28.04.1958இல் வினியோகிக்கப்பட்ட கடப்பிதழ். இக்கடப்பிதழில் மூன்று முத்திரைகள் உள்ளன.

முதல் முத்திரை 10 ஜூலை 1958- இல் சென்னை துறைமுகச் சுங்கத்தால் (Port Registration Officer, Madras Harbour) இடப்பட்டுள்ளது. அம்முத்திரையில் இந்தியாவை அடைந்ததாகவும் (arrived in India) குறிப்பிடப்பட்டுள்ளது.

13 மார்ச்சு .1959-இல் இடப்பட்ட இரண்டாம் முத்திரையில் இந்தியாவைவிட்டு வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளது (Left India).

மூன்றாம் முத்திரை 19 மார்ச்சு .1959-இல் பினாங்கு சுங்கத்துறையால் இடப்பட்டுள்ளது.

இதன் வழி சென்னையிலிருந்து கப்பலில் பினாங்கு வந்து சேர்வதற்கு ஆறு நாள்கள் தேவைப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.

செர்க்கம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் (மலேசியா) - 1962

நன்றி : மலர்

Wednesday, February 11, 2015


நல்வரவு

வணக்கம்.

இந்த புதிய வலைப்பூ தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூ பட்டியலில் இன்று முதல் இணைகின்றது.

மலேசியத் தமிழர்களின் வரலாற்றை புகைப்படங்களாகப் பதிந்து வைக்க உருவாக்கப்பட்ட பகுதி இது.

அன்புடன்
சுபாஷிணி